உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

உலக செய்திகள் 2 நாட்கள் முன்
86 பார்வைகள்

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுப் பெண்ணின் கொடூரப் படுகொலைச் சம்பவத்திற்காக 1996 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 வயதான கிறிஸ்டா பைக் (Christa Pike) என்பவருக்கே, நெஷ்வில்லில் உள்ள ரிவர்பெண்ட் பாதுகாப்புச் சிறைச்சாலையில் நச்சு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவருக்கு ‘பென்டோபார்பிட்டல்’ (pentobarbital) எனும் கெமிக்கல் இருமுறை ஊசி மூலம் செலுத்தப்பட்டபோதிலும், அவர் இறக்காமல் சுயநினைவை இழந்து தொடர்ந்து சுவாசித்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து, அவரது சட்டத்தரணிகள் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றத்தை உடனடியாக நிறுத்துமாறும் அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்குமாறும் கோரினர்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் தண்டனை நிறைவேற்றம் இடைநிறுத்தப்பட்டு, அவர் மேலதிக சிகிச்சைக்காக சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு உயிர்காக்கும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள டென்னசி மாநில ஆளுநர் பில் லீ (Bill Lee), மரண தண்டனை நிறைவேற்றத்தின் போது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விரிவான சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்வாண்டில் திட்டமிடப்பட்டிருந்த எஞ்சிய மரண தண்டனை நிறைவேற்றங்களையும் அவர் இடைநிறுத்தியுள்ளார்.

1995 ஆம் ஆண்டு தனது 18 ஆவது வயதில் காதலனுடன் இணைந்து 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் (Colleen Slemmer) என்பவரைக் கொடூரமாகக் கொலை செய்தமைக்காக கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை வரிசையில் இருந்த ஒரே பெண் குற்றவாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

76 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

98 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

101 0 0
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 5.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (1) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இந்திய நேரப்படி காலை 6:59 அளவில் பதிவாகியுள்ளதுடன்,…

79 0 0