உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

துமிந்தவிற்கு எதிரான தங்க முலாம் துப்பாக்கி வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
77 பார்வைகள்

ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில்தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பிரதிவாதிகளாகக் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நவம்பர் மாதம் 4 ஆம் திகதி விசரணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இவ்வழக்கு இன்று (02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மற்றும் அய்குல் ஷெரகசினா (Aigul Shergasina) என்ற கசகஸ்தான் நாட்டுப் பெண்ணும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். 

அங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சுகவீனமுற்றுள்ளதால், வழக்கின் முன்விசாரணை மாநாட்டிற்காக (Pre-trial conference) இவ்வழக்கை மீண்டும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

2025 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹவ்லொக் சிட்டி குடியிருப்புத் தொகுதியில் உரிமமின்றித் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

82 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

85 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

76 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

63 0 0