உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழ்நாட்டில் அறிமுகமான தானியங்கி சுங்கச்சாவடி !

இந்திய செய்திகள் 2 நாட்கள் முன்
89 பார்வைகள்

தமிழ்நாட்டில் முதல்முறையாக பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல், தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) நடைமுறைக்கு வந்துள்ளது.

குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்.

தற்போது வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில், தானியங்கி சுங்கச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி எப்போதும் மிகவும் பரபரப்பாக இயங்கும் சுங்கச்சாவடி ஆகும். இங்கு நாளொன்றுக்கு சுமார் 46,500 வாகனங்கள் வந்து செல்கின்றன.

அக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்த சாவடியில் வாகனங்கள் நிற்க வேண்டியதில்லை.

RFID ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள்பொருத்தப்பட்ட உயரமான கேன்ட்ரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள உயர்தர கேமராக்கள் வாகனத்தின் எண்களையும், ஃபாஸ்டேக் கணக்கையும் நொடியில் படித்து, அதற்கேற்ப கட்டணத்தை வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்து கொள்ளும்.

பாஸ்டேக் இல்லாமலோ அல்லது போதுமான பேலன்ஸ் இல்லாமலோ சென்றால், அவர்களுக்கு அபராதச் சலான் அனுப்பப்படும்.

ஃபாஸ்டேக் வேலை செய்யாத பட்சத்தில், இந்த கேமராக்கள் வாகன எண்களைப் புகைப்படமாக எடுத்து மாற்று வழியில் கட்டணம் வசூலிக்க உதவம்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த பரனூர் சுங்கச்சாவடியில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை படிப்படியாக மற்ற சுங்கச்சாவடிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஏற்கனவே குஜராத், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

46 0 0
இந்திய செய்திகள்

“மகளிருக்கான வெற்றிப் பயணத்தை” இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.சாதாரண நகர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக…

95 0 0
இந்திய செய்திகள்

முதலமைச்சர் விஜய்க்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டு

தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் செயற்பாடுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்.!

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் மரைன் பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை இரவு…

95 0 0