யாழில் பெண் குழந்தை உ**யிரிழப்பு.!
நேற்று காலை புட்டிப்பால் குடித்துவிட்டு உறங்கிய குழந்தை வாயாலும் மூக்காலும் நுரை வந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது அனலைதீவு – 5ஆம் வட்டாரத்தை சேர்ந்த இனிசன் கிருத்திகா என் ஒரு வயதுக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைக்கு தாயார் நேற்று காலை புட்டிப்பால் ஊட்டி விட்டு குழந்தையை உறங்க வைத்துள்ளார். பின்னர் சில மணிநேரம் கழித்து குழந்தையின் வாயிலும் மூக்கிலும் நுரை வந்தது.
இந்நிலையில் குழந்தையை அனலைதீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, வைத்தியர்கள் குழந்தையை ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பினர். இருப்பினும் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.