வட்டு இந்துக் கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு.!
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் யாழ்/வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
இதன்போது சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. சிறுவர்களின் உரிமைகள் என்ன, சிறுவர்கள் எவ்வாறு வன்முறைகளில் இருந்து மீள்வது, எதிர்காலத்தில் ஒரு நல்ல பிரஜையாக மிளிர்வது எவ்வாறு என்பது தொடர்பான விளக்கவுரையினை கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன் ஆற்றினார்.
மேலும், கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன. அத்துடன் சிறுவர் தினத்தின் உறுதிமொழி வாசிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது. இறுதியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் முதல்வர் சி.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




