உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
72 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 2 கிராம் வீதம் மொத்தம் 4 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் சம்மாந்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 28 வயதுடைய சந்தேகநபர் சம்மாந்துறை மற்றும் வாழைச்சேனை ஆகிய பகுதிகளை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டவராவார். இவர் ஏற்கனவே பல முறை போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளி என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர் வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இவ்விரு சந்தேகநபர்களிடமும் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையிலும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரிலும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சியின் வழிநடத்தலிலும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலிலும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில் ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக தீவிர விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

76 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

71 0 0
அம்பாறை செய்திகள்

இரண்டு பிள்ளைகளின் தாய் உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட…

147 0 0
அம்பாறை செய்திகள்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்…

118 0 0