உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். இந்துக் கல்லூரி அதிபர் மீதான அவதூறு; மன்னிப்புக் கோர உத்தரவிட்ட நீதிமன்றம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
149 பார்வைகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக, வி.ஜனகனினால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்குப் புறம்பான பதிவுகளுக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு நேற்று செவ்வாய்கிழமை(29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாகத் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த காணொளியை எதிர்மனுதாரரான ஜனகன் விநாயகமூர்த்தி நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் சமரசமான அணுகுமுறையை ஏற்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, வழக்கு விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக, “யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சைவ சமய அடையாளங்களைப் பள்ளி வளாகத்திலிருந்து அழித்து அகற்றுகின்றார். அவர் மத நம்பிக்கையற்றவர். பாடசாலையின் பாரம்பரியத்தை நிராகரிக்கின்றார்” என்று குற்றம்சாட்டி ஜனகன் விநாயகமூர்த்தியினால் முகநூலில் காணொளியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இக்காணொளியை உடனடியாக நீக்குமாறும், இது தொடர்பாக அதிபரிடம் மன்னிப்புக் கோருமாறும், எதிர்காலத்தில் இதுபோன்ற காணொளிகளை வெளியிடமாட்டேன் என உத்தரவாதம் அளிக்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் நிபந்தனைக் கட்டளை பிறப்பித்திருந்தது.

29.09.2026 அன்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் நேரில் முன்னிலையான ஜனகன் விநாயகமூர்த்தி, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்கி அக்காணொளியை ஏற்கனவே நீக்கிவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், காரணம் காட்டுவதற்காக அவகாசம் கோரிய அவர், அதிபரிடம் மன்னிப்புக் கோருவது உள்ளிட்ட விடயங்களில் இரு தரப்பும் ஓர் இணக்கமான முடிவை எட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இரு தரப்பின் கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிவான், சமரச முயற்சியை மேற்கொள்வதற்காக வழக்கை ஒத்திவைத்தார்.

இவ்வழக்கில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறன் சார்பாக மூத்த சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், கலாநிதி கு.குருபரன் ஆகியோருடன் மேலும் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

வி.ஜனகன் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, என்.கே.அசோக்பரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

149 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

138 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

132 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

140 0 0