உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் நிதி ஆதாரங்களை முடக்க உதவி செய்தல் 15 மில்லியன் வெகுமதி!!

உலக செய்திகள் 4 நாட்கள் முன்
105 பார்வைகள்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) நிதி ஆதாரங்களை முடக்குவதற்குத் தேவையான தகவல்களை வழங்குபவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளர் டொமி பிகோட் (Tommy Pigott) தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதார அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, இதற்கு முன்னரும் ஈரான் தொடர்பான தகவல்களுக்குப் பல மில்லியன் டொலர் வெகுமதிகளை அறிவித்திருந்ததுடன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் IRGC இன் ஐந்து சிரேஷ்ட தளபதிகளை அடையாளம் காண உதவும் தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் வழங்குவதாகக் கூறியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, ஈரானுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுத உதிரிப்பாகங்களைக் கொள்வன செய்து விநியோகிப்பதில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், புதிதாக 8 நிறுவனங்கள் மற்றும் 5 தனிநபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் டொமி பிகோட் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆயுதப் பரவல் வலைப்பின்னல்களை முடக்குவதற்கும், இவ்வாறான நடவடிக்கைகளுக்குப் பயன்படும் பொருட்கள், தொழில்நுட்பம், நிதி மற்றும் சேவைகள் ஈரானிய ஆட்சிக்குக் கிடைப்பதைத் தடுப்பதற்கும் பங்காளிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

கீவின் முக்கிய பாலங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், நகரின் இரண்டாவது முக்கிய பாலமான வடக்கு பாலம் மீதும் சனிக்கிழமை…

77 0 0
உலக செய்திகள்

இருமுறை நச்சு ஊசி செலுத்தியும் உயிர் தப்பிய மரண தண்டனைக் கைதி!

அமெரிக்காவின் டென்னசி (Tennessee) மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் குற்றவாளி ஒருவருக்கு இருமுறை நச்சு ஊசிகள் செலுத்தப்பட்டபோதிலும் அவர் உயிரிழக்காததால், அவர் அவசர அவசரமாக வைத்தியசாலையில்…

87 0 0
உலக செய்திகள்

இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகளுக்குத் தடை?

எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதான அரபு அரசியல் கூட்டணிகளான ‘கூட்டுப் பட்டியல்’ (Joint List), ‘ரா அம்’ (Ra’am)…

99 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்! ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களைத் தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் எச்சரித்துள்ளார். ‘USS Theodore Roosevelt’ விமானம் தாங்கிப்…

102 0 0