உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரண்டு பிள்ளைகளின் தாய் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 5 நாட்கள் முன்
147 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணபதிபுரம் – மல்வத்தை 04 பகுதியில் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வேலுப்பிள்ளை பிரவாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். நசீலின் உத்தரவின் பேரில், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

மரண விசாரணைகளின் பின்னர், உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகச் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

75 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

71 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

71 0 0
அம்பாறை செய்திகள்

போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புறநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்…

117 0 0