உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெண்களுக்கான இலவச பயணம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கை

இந்திய செய்திகள் 7 நாட்கள் முன்
122 பார்வைகள்

தனியார் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் வழங்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் மாநகர, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் மகளிர் விடியல் பயணம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தினை விரிவாக்கம் செய்துள்ள முதல்வர் விஜய், அக்டோபர் 2 முதல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ், புறநகர் சாதாரண பேருந்துகள் உள்ளிட்டவற்றில் வெற்றி பயணம் திட்டம் மூலம் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்படும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தனியார் பேருந்துகளிலும், பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

இலவசப் பயணத்தால் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செப்டம்பர் .29 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர்.30 ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை 24 மணி நேரம், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம்” என்று அறிவித்துள்ளனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

டெல்லி போராட்டத்தில் பெண் ஊடகவியலாளர்களிடம் தவறாக நடந்து கொண்ட பொலிஸார்!

இந்தியாவின் புதுடெல்லியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தங்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, மூன்று பெண் ஊடகவியலாளர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. போராட்டத்தில்…

92 0 0
இந்திய செய்திகள்

சவூதியில் இடம்பெற்ற கார் விபத்தில் 4 இந்திய செவிலியர்கள் உயி@ரிழப்பு!

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த 4 செவிலியர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கிய இந்திய செவிலியர்கள்கேரளாவின்…

85 0 0
இந்திய செய்திகள்

தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது!

தாராபுரத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மரகதம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவடையும்…

78 0 0
இந்திய செய்திகள்

இலங்கை பெண்ணின் திருமண பதிவு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த…

63 0 0