உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

திலீபனின் சிலையை உடனே மீள நிறுவு! : வடக்கு – கிழக்கில் வெடித்தது பெரும் கண்டனப் போராட்டம்!!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
118 பார்வைகள்

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் இன்று திங்கட்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டின் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.

இதற்கமைய, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவாலயம் முன்பாக இன்று பிற்பகல் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.

குறிப்பாக, “தியாகி திலீபன் தமிழினத்தின் அடையாளம்”, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் – பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்”, “இனப்படுகொலை புரிந்த இராணுவத்துக்குச் சிலை; தமிழினத்தின் தியாகிக்குச் சிலை இல்லையா?”, “தியாகி திலீபனின் சிலையை உடனே மீள நிறுவு”, “தலைமுறை கடந்தும் என்றும் வரலாறாய் வாழ்பவன் திலீபன்”, “அநுர அரசே, உன்னுடைய இரட்டை வேடம் அம்பலம்” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பி அவர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வடக்கு, கிழக்கில் எழுந்துள்ள இந்த எதிர்ப்பலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

107 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என…

106 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

108 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

105 0 0