உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

பொலிஸ் காவலில் உ**யிரிழந்த விதுசன்; கிழக்கு மாகாண குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்படவுள்ள வழக்கு.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
107 பார்வைகள்

மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விதுசன் (21 வயது) என்ற தமிழ் இளைஞன், 2021 ஜூன் மாதம் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்த சம்பவம் தொடர்பிலான விசாரணை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

விதுசனின் மரணம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விதுசனின் குடும்பம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஸ் ஆஜராகியிருந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கிலே பொலிஸாருடைய விசாரணைகளில் எந்தவிதமான முன்னேற்றகரமான நிலைமையும் இல்லாதிருப்பதை நீதிமன்றத்தினுடைய கவனத்துக்கு கொண்டு வந்து, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்குமாறு விண்ணப்பம் செய்திருந்தோம் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

நீதிமன்றம் கடந்த தவணையிலேயே இது பற்றி சுயமாக ஆராய்ந்து, கிழக்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினருடைய விசாரணைக்காக இந்த வழக்கை மாற்றுவதற்கு திட்டமிட்டிருந்ததாக அறியத் தந்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் எதிர்காலத்திலே இந்த வழக்கை கிழக்கு மாகாண குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்க இருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட விதுஷனுடைய குடும்பத்தோடு சேர்ந்து நாங்களும் நீதிக்காக போராடுவோம், குரல் கொடுப்போம் எனவும் தெரிவித்தர்.

2021 ஜூன் 2ஆம் திகதி இரவு 10:30 மணியளவில் இருதயபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, சிவில் உடையில் வந்த பொலிஸாரால் விதுசன் கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அடுத்த நாள் (ஜூன் 3) அதிகாலையில் விதுசன் உயிரிழந்துவிட்டதாகக் குடும்பத்தினருக்குத் பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விதுசனின் குடும்பத்தினர் பொலிஸார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் பொலிஸார் தாக்கியதனால்தான் தமது மகன் உயிரிந்திருந்ததாக தெரிவித்து இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்து ஐந்து வருடகாலமாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

106 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என…

105 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

108 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

105 0 0