உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

மன்னாரில் விமர்சையாக நடைபெற்ற உலக சுற்றுலா தின இறுதி நாள் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
91 பார்வைகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சுற்றுலா பணியகம் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த உலக சுற்றுலா தினம் உணவுத் திருவிழா 3 நாள் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை மன்னார் உப்புக்குளம் அல்பத்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேசேகரன் கலந்து கொண்டார்.

மேலும் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

மேலும் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் புதிய இணையத்தளம் ஒன்றும் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

106 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என…

105 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

108 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

105 0 0