உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

இந்தியாவில் அந்நிய முதலீட்டை பெறுவதில் தமிழகம் முதலிடம்!

இந்திய செய்திகள் 15 மணி நேரம் முன்
104 பார்வைகள்

முதல் காலாண்டில் ரூ. 55,900 கோடி (595 கோடி டொலர்) அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்து இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்திய மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்கள் இதைத் தெரிவிக்கின்றன.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை ஈா்த்த முதல் 10 மாநிலங்களின் புள்ளிவிவரங்களை இந்திய மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ரூ.39,800 கோடி (422 கோடி டொலர்) பெற்று 2-ஆம் இடத்திலும், டெல்லி ரூ.25,203 கோடி (267 கோடி டொலர்) பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.

துறைவாரியாக நாட்டில் சேவைத் துறை அதிகபட்சமாக 704 கோடி டொலர் முதலீட்டைப் பெற்று முதலிடத்திலும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை 284 கோடி டொலர் முதலீட்டைப் பெற்று 2-ஆம் இடத்திலும், வா்த்தகத் துறை 192 கோடி டொலர் முதலீட்டைப் பெற்று 3-ஆம் இடத்திலும், மரபுசாரா எரிசக்தி துறை 124 கோடி டொலரை பெற்று 4-ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த கால கட்டத்தில் 571 கோடி டொலர் ஜப்பானில் இருந்து முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. அதிக முதலீடுகள் வந்த நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சிங்கப்பூரிலிருந்து 522 கோடி டொலரும், மோரீஷஸிலிருந்து 231 கோடி டொலரும், அமெரிக்காவிலிருந்து 134 கோடி டொலரும் இந்தியாவில் முதலீடு வரப்பெற்றுள்ளன. மொத்த அந்நிய முதலீடு நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,065 கோடி டொலராக உயா்ந்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு 2026-2027 (ஏப்ரல் – ஜூன்)

தமிழ்நாடு – ரூ. 55,900 கோடி

மகாராஷ்டிரம் – ரூ. 39,800 கோடி

டெல்லி – ரூ. 25,203 கோடி

கா்நாடகம் – ரூ. 19,857 கோடி

ஹரியாணா – ரூ. 12,776 கோடி

தெலங்கானா – ரூ. 12,506 கோடி

குஜராத் – ரூ. 12,287 கோடி

உத்தர பிரதேசம் – ரூ. 538 கோடி

ராஜஸ்தான் – ரூ.99 கோடி

ஜாா்க்கண்ட் – ரூ.1 கோடி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – மதுரையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அரச வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்…

100 0 0
இந்திய செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் தொடர்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

அங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக செஸ் வீர, வீராங்கனைகளுக்குத்…

119 0 0
இந்திய செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் இன்று ஆரம்பம்!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் நிதி தேவைக்கு ஏற்ப தேர்தல் வாக்குறுதிகளாக…

110 0 0
இந்திய செய்திகள்

சபரிமலையில் தங்கக் கிரீடம் மாயம்!

சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை…

78 0 0