ஜோஹன்னஸ்பர்க் அருகே 10 ஆவது பெண்ணின் சட@லம் மீட்பு
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனியின் தெம்பிசா (Tembisa) பகுதியில் மற்றுமொரு பெண்ணின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜூலை நடுப்பகுதியில் இருந்து இதுவரை அந்தப்பகுதியில் மீட்கப்பட்ட பெண்களின் உடலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எகுர்ஹுலேனி பகுதியில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 6 கிலோமீற்றர் சுற்றளவுக்குள் 3 பெண்களின் உடலங்கள் முதற்கட்டமாக மீட்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து இந்த மாதத் தொடக்கத்தில் வெறும் 10 நாட்களில் 6 பெண்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த சனிக்கிழமையன்று (26) மீட்கப்பட்ட 10 ஆவது பெண்ணும் கற்களால் தாக்கப்பட்டுப் உயிரிழந்து இருக்கலாம் என செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடலங்களில் பெரும்பாலானவை 20 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்களுடையது என்றும், அவற்றில் பல உடல்கள் ஆடைகளின்றியோ அல்லது அரைகுறை ஆடைகளுடனோ மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
9 ஆவது பெண்ணின் உயிரிழப்பு தனிப்பட்ட உறவுமுறைப் பிரச்சனை காரணமாக நடந்தது எனக் கூறி இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய பெண்களின் உயிரிழப்புகளுக்கு இடையே தொடர்பு இருக்கலாமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச்சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சிறில் ரமபோசா, “நாட்டில் தொடர்ச்சியாகப் பெண்கள் மர்மமாக உயிரிழப்பது தென்னாப்பிரிக்க ஆண்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்” எனக் கண்டித்துள்ளார்.
உலகிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று என்பதால், இந்தத் தொடர் மரணங்கள் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.