யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!
இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த பேருந்து திடீரென பின்னோக்கி நகர்த்தப்பட்டது. இதன்போது பின்னால் நின்ற நபர் கீழே விழுந்ததால் அவரது கால்கள் சிதைவடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பின்னர் குறித்த பேருந்து சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.