உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
75 பார்வைகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த நிகழ்வாக திலீபன் நிகழ்வு உண்மையிலே ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கிய செயற்பாடாகும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் டாக்டர் இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி உட்பட பலர் கலந்துகெர்ணடனர்.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்றன.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
வரலாற்றிலே தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக, விடுதலைக்காக பல வடிவங்களிலே தங்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். அந்த வகையிலே அகிம்சை வழியிலும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு தமிழ் மக்களுக்காக தன்னுயிரை உயிர்நீத்த எங்களுடைய தியாகச்சுடர் திலீபன் அண்ணன் அவர்களின் இந்த நினைவு நாளிலே, தமிழ் மக்கள் காலம் காலமாக ஒடுக்கப்படுகின்ற, உரிமைகள் பறிக்கப்படுகின்ற கடந்தகால, சமகால சூழ்நிலைகளிலே பல வடிவங்களிலும் தமிழ் மக்களுக்கான உரிமைகள் சட்ட ரீதியாக, அடக்குமுறை ரீதியாக, ராஜதந்திர ரீதியாக பறிக்கப்படுகின்ற வேளைகளிலெல்லாம் தமிழ் இனம் தங்களுடைய உரிமைகளுக்காக சாத்வீக வழியிலே, ஆயுதப் போராட்ட வழியிலே பல வடிவங்களிலே போராட வேண்டிய நிலையிலே, இந்த சமூகத்திற்காக சாத்வீக ரீதியிலும் உண்ணாவிரதத்தின் ஊடாக இந்த உலக தேசத்திற்கே தமிழ் மக்களுடைய போராட்டத்தை எடுத்துச் சென்ற எங்களுடைய தியாகச்சுடர் திலீபன் அண்ணன் அவர்களின் இந்த நினைவு நாளிலே, இன்றும் கூட தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படாது, தமிழ் மக்களுக்கான ஜனநாயக நடைமுறைகள் நசுக்கப்படுகின்ற இந்த காலகட்டத்திலே அவர்களுடைய அடிப்படையான நிலம், மொழி, கலாச்சார உரிமைகளை பல்வேறுபட்ட படிமுறைகளிலே நசுக்குகின்ற அரசாங்கத்திற்கு எதிராக நாமும் எங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கின்றோம்.

உண்மையிலேயே காலத்தின் புருஷர்கள் எங்களுக்கு பல விடயங்களைக் கொண்டு வந்திருக்கின்றார்கள். பிரித்தானிய அல்லது ஐரோப்பிய வருகைக்கு முன்பு ஒரு சுதந்திரமாக வாழ்ந்த எமது இனம், அவர்களுடைய ஆட்சியின் பின்பு ஒரு அடக்குமுறைக்குள், ஒடுக்குமுறைக்குள் உரிமைகள் பறிக்கப்பட்ட வகையிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கான உரிமைகளை நாம் பல வடிவங்களிலே கேட்டுப் போராடியும் கூட, அவற்றின் அடிப்படையான விடயங்களைக் கூட பேரினவாத சித்தாந்த அரசுகள் தர மறுக்கின்ற சூழலிலே எங்களுடைய போராட்டங்கள் பல பரிணாமங்களை எடுத்திருக்கின்றன. இருந்தபோதிலும், எமது இளைய தலைமுறை அந்தப் போராட்டத்தின் வடிவத்தை, தமிழ் மக்களின் உரிமைக்கான வடிவங்களைக் கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பிருக்கின்றது. எங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒடுக்குமுறைகளை, ஞாபகங்களை அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

உண்மையிலேயே யோசித்து பார்க்க வேண்டிய தருணம், உண்ணாவிரதம் இருந்து மக்களுக்காக தனது கொள்கையிலே உயிர்த்துடிப்புடன் தனது உயிரையே ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபன் அண்ணனின் நடைமுறைகள் இளம் சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

அந்த வகையிலே இன்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அவர்களுடைய ஞாபகார்த்த நிகழ்வு மட்டுமல்லாது, எங்களுடைய தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற இளம் சமுதாயத்தின் அடுத்த கைகளில் கொடுக்க வேண்டிய இந்த நிகழ்வானது உண்மையிலே ஏற்பாடு செய்யப்பட்டமை தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கிய செயற்பாடாகும். அந்த வகையிலே அவருடைய நினைவுகளுடன் தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்திலே நாம் களம் கடந்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

எமக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத சந்தர்ப்பத்திலே நாம் எமது தர்த்துணிவுடன் தமிழ் மக்களுக்கான உணர்வுப் பாதையிலே எங்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாமும் அவருடைய பாணியிலே முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதியுடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் பயணத்துடன் அவருடைய ஞாபகார்த்த, சிரார்த்த 37 ஆம் ஆண்டு நிகழ்விலே உறுதியெடுத்துக் கொள்வோம் என்று கூறிக்கொண்டு, இளைஞர்களும் எதிர்காலத்திலே எமது உரிமைக்காக பயணிக்க வேண்டும் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

101 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கச் செய்த பிரதேச செயலகங்கள் கெளரவிப்பு.!

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகம் கிடைக்கச் செய்த பிரதேச செயலகங்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று 26.09.2026 பிற்பகல் 2.30 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…

81 0 0