மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நடைபவனி.!
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்த ‘மைக் நடைபவனி’ இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தளராத மனவுறுதி, தகர்க்க முடியாத பாரம்பரியம் என்னும் தலைப்பில் இன்றைய தினம் மைக் வோக் சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பாடசாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வினை தொடர்ந்து இந்த நடைபவனி நடைபெற்றது.
நடைபவனி கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக தாண்டவன்வெளிக்குச் சென்று அதன் ஊடாக அரசடி சந்திவரையில் சென்று மீண்டும் பாடசாலையினை நோக்கி வருகை தந்தது.
சாரணிய மாணவர்கள், பாண்ட் குழுவினர் மற்றும் இனியம் இசைக்குழுவினரின் இசையுடன் மாணவர்களின் இந்த நடைபவனி ஆரம்பமானது.
கல்லூரியின் பெருமைகளையும் சாதனைகளையும் எடுத்துக் காட்டும் அலங்கார ஊர்திகள், பதாதைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்ட மைக் நடைபவனி மட்டக்களப்பு சமூகத்திற்கும், முழு இலங்கைக்கும் புனித மிக்கேல் கல்லூரியின் அருமை பெருமைகளை பறைசாற்றும் முகமாகவே இந்நிகழ்வினை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





