உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

மட்டக்களப்பில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
94 பார்வைகள்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஏட்டிக்கு போட்டியான நிகழ்வாக இரு நிகழ்வுகள் நடைபெற்றன.

காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட அதேநேரம் காந்தி சிலைக்கு அருகில் மட்டக்களப்பு மாநகரசபையும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக நடாத்தப்பட்ட நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி, மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் ஜெயந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் பல வருடமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இதேநேரம் காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு அருகில் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வினை முதல்முறையாக நடாத்தினார்கள்.

மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் வீர மரணம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வினை மட்டக்களப்பு மாநகரசபையினர் ஏட்டிக்கு போட்டியாக நடாத்தியமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

101 0 0