உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டை.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
100 பார்வைகள்

குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவிற்கு தொழில் நிமிர்த்தம் சென்ற அனோஜனிற்கு அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் “அனோஜனுக்கு கருணை காட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டையென்று இன்று (26) மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

அனோஜனின் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் மிகுந்த சிரத்தையுடன் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துவரும் நிலையில் அரசாங்கத்தின் முன்னெடுப்புகளிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அனோஜனுக்கு கருணை காட்டுமாறு கோரியே மட்டக்களப்பு நகரில் இக் கையெழுத்து போராட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ.உதயகாந்த் தலைமையில் அதன் செயலாளர் ரீ.லெட்சுமிகாந்தனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

அனோஜன் சவூதி அரேபியாவில் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் எனும் அடிப்படையில், அவரது உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் முன்னின்றி செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த வகையில் நாடு பூராகவும் இவருக்கு ஆதரவான பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட சமூக செயற்பாடுகளையும், மனிதாபிமான பணிகளையும் முன்னெடுத்து வரும் சமூக மட்ட அமைப்பு என்ற வகையில் “அனோஜனுக்கு கருணை காட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் சவூதி மன்னருக்கும், எமது இலங்கை நாட்டின் அதிபருக்கும் வழங்கி வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜரிற்கு கையெழுத்து சேகரிப்பினை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உ.உதயகாந்த் இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மனிதாபிமான செயற்பாடுகளிற்கு ஒரு போதும் பின்னிற்பவர்கள் அல்ல என தெரிவித்திருந்தார்.

இக் கையெழுத்து சேகரிப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், சர்வ மத தலைவர்கள், சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், மீயுயர் குழு உறுப்பினர்கள், தொகுதிகளுக்கான பிரதான இணைப்பாளர்கள், பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விளையாட்டு கழக பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் அனோஜனிற்காக கருணை கோரும் மனுவில் கையொப்பங்களை இட்டிருந்தனர்.

இதன்போது 5000 கையெழுத்துக்களை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள், சமூக மேம்பாட்டு மையம் சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

101 0 0