உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
97 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) காலை 10 மணியளவில் மன்னாரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவு நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்வுபூர்வமாக நடைபெற்ற இந்நிகழ்வில், திலீபனின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருந்து தன்னுயிரை ஈந்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 26 வரை உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

101 0 0