உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

கொங்கோவில் விமான விபத்து; 14 பேர் உ**யிரிழப்பு.!

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
98 பார்வைகள்

கொங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோவில் தென்மேற்கே கிக்வித் நகரில் இருந்து கின்ஷாசா நகர் நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில் அதில், லெப்டினென்ட் ஜெனரல் முதும்போ கடாளை தியண்டே மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் பகுமி லிகுலியா என்ற 2 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் 12 பேர் பயணித்து உள்ளனர்.

இந்நிலையில், கெங்கே என்ற இடத்தில் சென்றபோது, விமானம் திடீரென்று விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் அதில் இருந்த இராணுவ அதிகாரிகள் உட்பட 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொங்கோ இராணுவத்தின் செய்தி தொடர்பாளரான மேஜர் ஜெனரல் எபோமி எகெங்கே வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

எனினும் இதுபற்றி விமான போக்குவரத்து கழக தலைவர் டிரைபோன் கின்-கை கூறும்போது, விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மீண்டும் தாக்குதல் தொடுத்தால் இந்தியப் பெருங்கடலுக்கும் போர் பரவும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ தனக்கு எதிராக மீண்டும் ஏதேனும் தாக்குதல்களைத் தொடுத்தால், மத்திய கிழக்கு மோதலை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக…

95 0 0
உலக செய்திகள்

ஐநா பொதுச் சபையில் கடுமையாகப் பேசிய இஸ்ரேலியப் பிரதமர் : வெளிநடப்புச் செய்த பிரதிநிதிகளை ‘ஒழுக்கமற்றவர்கள்’ என சாடல்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ஆரம்பித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகப் பல நாடுகளின் பிரதிநிதிகள் வெளிநடப்புச் செய்த நிலையில், அவர்…

108 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெள்ளை மாளிகைக்கு விஜயம்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சீன ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி…

92 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்க்கு மகத்தான வரவேற்பளித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

செயற்கை நுண்ணறிவு (AI), வர்த்தகம் மற்றும் ஈரான் விவகாரம் வரை வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தைத் தொடங்கும் வகையில்,…

90 0 0