உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியாக இடம்பெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
135 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், இராமநாதன் காண்பியக்கலை பீட மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நினைவேந்தல் செய்தனர்.

மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவை அர்த்தமுள்ள வகையில் நினைவுகூரும் நோக்கில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் தியாக தீபத்தின் நினைவைப் பகிரும் கருத்துரை நிகழ்வு ஒன்று யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்றவர்கள் திலீபனின் தியாகத்தையும் அவரது ஐந்து அம்சக் கோரிக்கைகளையும் நினைவு கூர்ந்ததுடன், சமூக நலனுக்காக தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0