உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

ராமர் பாலத்துடன் தொடர்புடைய மூன்றாவது மணல் திட்டை நோக்கி படகுச் சேவை ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
111 பார்வைகள்

உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) காலை வெள்ளோட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் கலந்து கொண்டார்.

மேலும், விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டதோடு, பொலிஸார் மற்றும் கடற்படையினரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னாரில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தலைமன்னார் கடற்கரையிலிருந்து 3 ஆவது மணல் திட்டை நோக்கி குறித்த வெள்ளோட்ட ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மேலும், விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் நகர பிரதேச செயலாளர் காந்தீபன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணியளவில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து விசேட படகுகள் மூலம் 3 ஆவது மணல் திட்டை நோக்கி பயணம் இடம்பெற்றது. இரண்டாவது மணல் திட்டில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் களைப்பாறுவதற்கும், அதில் அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை செய்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மூன்றாவது மணல் திட்டு, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்ற பொழுது அவர்களை இங்கு கூட்டிக்கொண்டு வந்து, இந்த இடத்தில் ஆய்வுகளைச் செய்துவிட்டு, அவர்கள் திரும்பிச் செல்லக்கூடிய ஒரு நடைமுறை முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து விசேட படகுகள் மூலம் கட்டணம் செலுத்தி மூன்றாவது மணல் திட்டிற்குச் சென்று பார்வையிடுவதற்கான வசதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த நடவடிக்கைகள் மூலம் தலைமன்னாரில் இருக்கின்ற சுய தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, தங்களுடைய வருமானத்தைப் பெருக்க கூடிய வகையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறித்த மணல் திட்டை பார்வையிம் தினம் தொடர்பாக ஏற்பாட்டு குழுவினரால் அறிவித்தல் விடுக்கப்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆட்டினை அடித்து கொ**லை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்.!

வாழ்வாதாரத்துக்காக கொடுத்த ஆடு ஒன்று நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மேலும்…

89 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைவு.!

இன்றையதினம் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்து ஏறியதில் ஆணொருவரது கால் சிதைவடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் அரச பேருந்து தரிப்பிடத்தில் நின்ற குறித்த…

100 0 0
இலங்கை செய்திகள்

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும்.!

தமிழினத்தின் உரிமைக்காக தமிழ் சமூகம் என்றும் பயணிக்க வேண்டும் என்ற செய்தியை இந்த முழு உலகுக்கும் கொண்டு செல்கின்ற, இளம் சமுதாயத்தின் கைகளில் கொடுக்க வேண்டிய இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி.!

முல்லைத்தீவு, கேப்பாபுலவு பிலக்குடியிருப்பில் தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவு தினத்தின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது. கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்…

101 0 0