உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபரிமலையில் தங்கக் கிரீடம் மாயம்!

இந்திய செய்திகள் 2 மாதங்கள் முன்
121 பார்வைகள்

சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.

இந்த கோவிலுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

மேலும், தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறினால் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக உள்ளது.

இந்தநிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 55.72 (445.76 கிராம்) பவுன் எடை கொண்ட தங்கக் கிரீடம் ஒன்று மாயமாகி உள்ளது.

தமிழக பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தங்கக் கிரீடத்தை எடுத்துவிட்டு, அதேபோன்ற போலி கிரீடம் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் உள்ள திருவாபரணங்களின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

நீதிபதி கே.டி.சங்கரன் தலைமையிலான திருவாபரணங்களை சரிபார்க்கும் குழு ஆய்வின்போது 55 பவுன் தங்கக் கிரீடத்துக்கு பதிலாக போலி கிரீடம் இருந்தது அம்பலமாகி உள்ளது.

இந்தக் கிரீடம் 2012ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்த நன்கொடை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள கிரீடம், அசலின் அதே வடிவத்திலும் அளவிலும் உள்ள ஒரு போலிக் கிரீடம் என தெரியவந்துள்ளது.

அதில் வைரங்களைப் போன்ற வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

நன்கொடையாக வழங்கப்பட்டபோது அந்தக் கிரீடத்தின் எடையை விட, தற்போது பாதுகாப்பு அறையில் உள்ள போலிக் கிரீடத்தின் எடை குறைவாக இருப்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

பாதுகாப்பு அறையில் சிசிடிவி கண்காணிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அசல் கிரீடம் எங்கே என்பது விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி கிரீடத்தை வைத்துவிட்டு அசல் தங்க கிரீடத்தை திருடியதாகத் தகவல் எழுந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஏற்கனவே துவார பாலகர் சிலைகளில் தங்கம் மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது 55.72 சவரன் தங்கக் கிரீடம் மாயமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் : மு.க.ஸ்டாலின் பதிவு

பெற்ற உரிமைகளை காப்போம்; மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நீதிக்கட்சி பிறந்தது…

145 0 0
இந்திய செய்திகள்

மறைந்த எம்.எல்.ஏ விஎஸ் பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் அஞ்சலி!

உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று (19) இரவு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

132 0 0
இந்திய செய்திகள்

‘ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு’ – வி.எஸ். பாபு மறைவுக்கு விஜய் உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது…

152 0 0
இந்திய செய்திகள்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.…

149 0 0