கூட்டணி வைத்தால் துணை முதல்வர் ஆக்குவதாக கூறிய ஆதவ் அர்ஜுனா – சீமான் பேச்சு
கூட்டணி வைத்தால் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி தருவதாக கூறினார் என சீமான் பேசியுள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பிரச்சாரத்தில் பேசிய சீமான், “850 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மீனவனின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியது உண்டா?
லட்சக்கணக்கான மக்கள் ஈழ தாயகத்தில் கொல்லப்பட்டார்கள், அவர்களுக்காக களத்திலே இன உணர்வை கட்டினீர்களா? இதற்காக போராடி ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தவன் நான். இவர் சிறையை பார்வையிட சென்றார், ஜோசியக்காரன் சொன்னதற்காக.
சட்டமன்றத்தில் ஆதாரம் உள்ளதாக முதல்வர் தெரிவித்த போது, கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அமைச்சர்களின் முறைகேடுகளை வெளியிட்டு நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்தால், நாம் பிறக்கும் முன் நடைபெற்ற சர்க்காரியா அறிக்கை குறித்து பேசுகிறார்.
அண்ணன் நான் கட்சி தொடங்கி களத்தில் நின்ற போது, கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் சென்று திமுகவிற்கு வாக்கு செலுத்தி வந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்தால் என்னை துணை முதல்வர் ஆக்குவதாக ஆதவ் அர்ஜுனா பேசினார்.
நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் வேளாண்துறை அமைச்சர் ஆக்குகிறோம் என்றார். எங்களுக்கு உடன்பாடு இல்லை என வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்.
ஆட்டுக்கு கூட அதிக மூளை இருக்கு. இந்த தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்களுக்கு ஒன்றும் கிடையாது. இந்த திராவிட கட்சிகளுக்கு எதிராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி களத்தை உருவாக்கி வைத்திருந்தோம். அவர் அதை அறுவடை செய்துவிட்டார்.” என பேசியுள்ளார்.