உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
27 ஞாயிறு

ஜெவார் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் திடீர் தீப்பரவல்: 9 பேர் உயி@ரிழப்பு!

இந்திய செய்திகள் 2 நாட்கள் முன்
78 பார்வைகள்

இந்தியாவில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் யமுனா விரைவுவழிச்சாலை (Yamuna Expressway) அருகே உள்ள ஜெவார்(Jewar) பகுதியில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த ஏசி பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் இருந்து மஹோபா நோக்கி 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு ஏசி பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1 பெண் மற்றும் 8 ஆண்கள் உட்பட 9 பேர் உடல் கருகி மற்றும் மூச்சுத்திணறலில் உயிரிழந்துள்ளனர்.

பேருந்தின் முன் பகுதியில் இருந்து கடுமையான கருகிய வாடையும், கரும்புகையும் வருவதாக பயணிகள் சிலர் புகார் அளித்தும், பேருந்து ஓட்டுனர் வாகனத்தை ஓரமாக நிறுத்தாமல் பயணத்தை தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் பேருந்தின் ஓட்டுநர் அறைக்குள் அதன் ஊழியர்கள் புகைப்பிடித்ததாகவும், அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே பேருந்தில் தீ பிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பேருந்தில் ஏற்பட்ட தீ மற்றும் கரும்புகையை தாங்க முடியாத சில பயணிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே குதித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 20க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

பேருந்தின் AC யூனிட்டில் ஏற்பட்ட மின் பழுது அல்லது வெடிப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது உயிரிழந்த 9 பேரின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சபரிமலையில் தங்கக் கிரீடம் மாயம்!

சபரிமலை கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரை கிலோ எடையிலான தங்க கிரீடம் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. கேரளம் மாநிலத்தில் உள்ள சபரிமலை…

63 0 0
இந்திய செய்திகள்

கூட்டணி வைத்தால் துணை முதல்வர் ஆக்குவதாக கூறிய ஆதவ் அர்ஜுனா – சீமான் பேச்சு

கூட்டணி வைத்தால் ஆதவ் அர்ஜுனா துணை முதல்வர் பதவி தருவதாக கூறினார் என சீமான் பேசியுள்ளார். தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் கார்த்திகாவை…

88 0 0
இந்திய செய்திகள்

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: முதலமைச்சர் விஜய் இன்று பிரசாரம்

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இடைத்தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை…

103 0 0
இந்திய செய்திகள்

சீனாவின் J-20-ஐ எதிர்கொள்ள இந்தியா தேர்வு செய்யும் Stealth போர் விமானம்

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில், Stealth போர் விமானத் தேர்வு குறித்து புதிய விவாதம் எழுந்துள்ளது. ரஷ்யா, Su-57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ள நிலையில், சீனாவின்…

90 0 0