உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
95 பார்வைகள்

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில் இன்று வியாழக்கிழமை (24) மாலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் சர்வமத பேரவையின் தலைவர் சிவ சிறி தர்மகுமார குருக்கள், மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி ஏ.எஸ்.எம்.அசீம், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ் அடிகளார் ஆகியோர் குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதன்போது அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் சர்வமதப் பேரவையின் சார்பாகவும், மன்னார் பிரஜைகள் குழுவின் சார்பாகவும் இந்த இடத்திலே, குறிப்பாக எங்களுக்குத் தெரியும் கடந்த இரண்டு வார காலமாக எமது இலங்கைத் திருநாட்டில் பேசுபொருளாக மாற்றப்பட்டிருக்கின்ற சகோதரர் அனோஜன் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கின்ற மரண தண்டனை சம்பந்தமாக, குறிப்பாக எமது நாட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முகப்புத்தக பதிவின் காரணமாக, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய அந்த அவதூறு வார்த்தை காரணமாக, சவூதி அரசாங்கத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தண்டனை நீக்கப்பட வேண்டும், மன்னிக்கப்பட வேண்டும், அவருக்கு வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த உலகத்திலே வழங்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த இடத்திலே நாங்கள் ஒன்று கூடியிருக்கிறோம்.

எனவே, அவர் பாவித்த அந்த வார்த்தைகள் என்பது, அது பாவிக்கப்பட்டு இருக்கக் கூடாது. உலக முஸ்லிம்களுடைய உள்ளங்களை துன்புறுத்தக் கூடிய, நோவினை ஏற்படுத்த கூடிய அந்த வார்த்தையை, மனிதநேயத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மன்னித்தாலும் கூட, இது சவூதி அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட இந்தத் தண்டனை என்ற அடிப்படையில் அவருக்கு மன்னித்து மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பத்தை சவூதி அரசாங்கம் தான் நிச்சயமாக வழங்க வேண்டும்.

எனவே நாங்கள் அந்த அடிப்படையில் சகல சமயத்தவர்களும் இந்த இடத்திலே ஒன்று கூடி, அவருடைய அந்த மறுவாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று சர்வமத அமைப்பின் சார்பாக இந்த இடத்திலே கௌரவமாக சவூதி அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன் எமது நாட்டு அரசாங்கம் அவருடைய விடுதலைக்காக, தண்டனைக் குறைப்புக்காக தன்னாலான ராஜதந்திர பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதேபோன்று இந்த நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும், பள்ளிவாசல் சமூகங்கள், அதேபோன்று அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் ஊடாகவும் இப்படியான பணிகளும் செய்யப்பட்டு கொண்டு இருக்கிறது என்பதை நாங்கள் அறிகிறோம்.

எனவே அந்த அடிப்படையில், மன்னார் மாவட்ட மக்கள் சார்பாகவும் நாங்கள் இந்த இடத்திலே மிக பணிவாக மீண்டும் ஒருமுறை சவூதி அரசாங்கத்திடம் நாங்கள் எங்களுடைய விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கின்றோம்.

அதேபோன்று எங்களுடைய நாட்டு அரசாங்கத்தினுடைய அந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பை வழங்குகின்றோம். மீண்டும் அவர் அந்த மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு வந்து சமய சகவாழ்வுக்கான தன்னுடைய பங்களிப்பை வழங்குவதற்கான மனமாற்றத்தை இறைவன் அவருக்கு வழங்க வேண்டும்.

எனவே அவருக்கான ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த இடத்திலே கேட்டு, அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயி@ரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடமுருட்டி என்னும் பகுதியில் நாவல் பழம் விற்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார் குறித்த விபத்து இன்று 24.09.2026 பிற்பகல் 3…

83 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறையின் சுயாதீனம், மற்றும் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும் – சத்தியலிங்கம் எம்.பி வலியுறுத்தல்…!

நீதித்துறையின் சுயாதீனம், சமத்துவம் ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும் என 22ஆம் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இன்றைய (24.09.2026) பாராளுமன்ற விவாதத்தின்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

77 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற வாயிலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் விவசாய அமைப்பாளர் சாணக்க பண்டாரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கரும்பு விவசாயியும் சிவில் அமைப்பாளருமான சாணக்க பண்டாரவிற்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான காரசாரமான வாக்குவாதம் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

75 0 0