உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கீரிமலை பிரதேசத்தில் கொட்டப்படும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
74 பார்வைகள்

கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, குறித்த பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதை அவதானித்த ஆளுநர், ‘இது மிகப்பெரிய அனர்த்தமாகும்’ எனக் குறிப்பிட்டதுடன், இப்பகுதியில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மனித வளத்தை மாத்திரம் பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் போதிய வேகத்தில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுகளைத் துரிதமாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, வலி. தெற்கு பிரதேச சபையால் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, வலி. தெற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் உறுதியளித்தார்.

அத்துடன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டதாக அங்கு கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதன்போது, வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகளை தமது சபையால் ஏற்றிச் செல்வதில்லை என வலி. வடக்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

கீரிமலை பிரதேசத்தில் காணப்படும் இந்நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு, மக்களின் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இக்கண்காணிப்பு பயணத்தின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

71 0 0
இலங்கை செய்திகள்

அருவித்தோட்டத்தில் மக்களின் காணிகளில் எல்லையிடும் வனவள திணைக்களத்தின் செயற்பாடு சத்தியலிங்கம் எம்.பியின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் வனவள திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்கள் இடுவதாக அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக்…

48 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சியின் பலவீனத்தையே ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன.!

எதிர்க்கட்சியின் பலவீனமும் ஆதரவற்ற நிலையும் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவே வெளிப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…

66 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில்…

91 0 0