உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
79 பார்வைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் பிரிவை அமைப்பதற்காகப் பல மருத்துவ நிபுணர்களும், வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கியுள்ளனர்.

மாவட்ட அளவிலும் மாகாண அளவிலும் தீவிர நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களுக்குத் தனித்துவமான மற்றும் உயர்தர அதிதீவிர சிகிச்சைகளை இதன் மூலம் வழங்கும் வகையில் இந்த பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரனின் முயற்சினால் உருவாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறுவர் நல வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

சிறுவர் நல மருத்துவச் சிகிச்சையில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்தச் சேவை திறம்படச் செயற்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேலும் பல புதிய மருத்துவப் பிரிவுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சியின் பலவீனத்தையே ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன.!

எதிர்க்கட்சியின் பலவீனமும் ஆதரவற்ற நிலையும் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவே வெளிப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…

62 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில்…

88 0 0
இலங்கை செய்திகள்

கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு.!

யாழ்ப்பாணம் மாநகரின் ஆளுகைக்குள் இருக்கும் கல்வியங்காடு செங்குந்தா சந்தையில் மீன் கழிவுகள் முறையாக அகற்றப்படாமையால் கழிவுகள் அழுகி, புழுக்கள் பெருகி கடும் துர்நாற்றம் வீசுவதால் பெரும் சிரமங்களை…

79 0 0
இலங்கை செய்திகள்

கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம்.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்…

80 0 0