உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
81 பார்வைகள்

மெக்சிகோவின் தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் உருவாகியுள்ள ‘போலோ’ (Polo) சூறாவளி, அதிவேகமாக வலுப்பெற்று 5ஆம் வகை சூறாவளியாக மாறியுள்ளதாக அமெரிக்காவின் National Oceanic and Atmospheric Administration தெரிவித்துள்ளது.

NOAA-வின் சூறாவளி கண்காணிப்பு வானூர்தி மேற்கொண்ட ஆய்வில், போலோ சூறாவளியின் அதிகபட்ச தொடர்ச்சியான காற்றின் வேகம் மணிக்கு சுமார் 285 கிலோமீற்றராக பதிவாகியுள்ளதுடன் மத்திய வளிமண்டல அழுத்தம் 892 மில்லிபார் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியின் மையப்பகுதி மெக்சிகோ கடற்கரையை ஒட்டி நகரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது நிலப்பரப்பில் நேரடியாகக் கரையைக் கடக்கும் என தற்போது எதிர்பார்க்கப்படவில்லை. எனினும், தென்மேற்கு மெக்சிகோவின் கடலோரப் பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், குறிப்பாக தாழ்வான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலோ சூறாவளி அடுத்த சில நாட்களிலும் 5ஆம் வகை வலிமையில் நீடிக்கக்கூடும் என National Oceanic and Atmospheric Administration கணித்துள்ளது.

இதனிடையே, மெக்சிகோவின் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளை அவதானித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

‘ஹோர்முஸ்’ நீரிணையை ஈரான் தனக்கான பேச்சுவார்த்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது!

ஈரான் நாட்டின் ஹோர்முஸ் நீரிணை உத்தியை பிராந்திய நாடுகள் தங்களது பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு பேச்சுவார்த்தை கருவியாகவே பார்ப்பதாக மத்திய கிழக்கு நுண்ணறிவு நிறுவனத்தின் (Middle East…

78 0 0
உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

100 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

97 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

103 0 0