உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

எருமை மாட்டுடன் மோதிய வாகனம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
87 பார்வைகள்

திருகோணமலை, தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதிய விபத்தில் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன் ஒன்று, நேற்று புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளியடி பகுதியில் வீதியில் நின்ற எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த வேன் சாரதி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய எருமை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியானது மக்களின் அதிக போக்குவரத்து மற்றும் குடியிருப்புப் பகுதியாகக் காணப்பட்ட போதிலும், வீதியில் போதிய மின் விளக்குகள் இன்மை காரணமாக அந்தப் பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகின்றது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கனமழை.!

நேற்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதேவேளை பல பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம்…

1 0 0
இலங்கை செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்; வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொ**லை;

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் தந்தை,…

71 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய…

78 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.!

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எடுத்துக் காட்டும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள்…

84 0 0