உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
46 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கோரிக்கையோடு, யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் முழுமையாகக் கை கோர்ப்பதாக யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (23) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“சகோதரர் சிவராசா அனோஜன் அவர்களின் குற்றம் தொடர்பில் நாம் பேசுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் புனித இஸ்லாமிய சமயத்தின் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியாகவும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் உறுதியாக நிற்கின்றது.”

அனோஜனின் விவகாரத்தை அரசியல் மற்றும் இன வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் அணுகி, அவரது உயிரைப் பாதுகாப்பதற்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான அனைத்துச் சட்ட, இராஜதந்திர மற்றும் சர்வதேச முயற்சிகளையும் முன்னெடுப்பது. இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் வெறுப்பையும் தூண்ட முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளிலிருந்து மக்களையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாப்பது. இவை இரண்டுமே மிகுந்த பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் அணுகப்பட வேண்டிய முக்கிய பணிகளாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதும், அதேவேளை சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் எனத் தனது ஊடக அறிக்கையில் முழுமையாக வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விடுதி ஒன்றில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது.!

திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொழில் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

66 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” எனும் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பம்.!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் தென்னை, பலா, ஈரப்பலா மற்றும் பல்வேறு பழக்கன்றுகளை நடும் தேசியத் திட்டத்தின் தொடக்கமாக “கப்ருக…

83 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் சந்திப்பு.!

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சர்வதேச நாணய நிதியத்தின்…

93 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; வெள்ளி மாலை வாக்கெடுப்பு.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்…

95 0 0