உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வீடொன்றில் நள்ளிரவில் திடீர் தீப்பரவல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
90 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இத் தீப்பரவலின் காரணமாக குறித்த வீடு பகுதியளவில் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே தீப்பரவலுக்கான உண்மைப் பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

நான்கு பிள்ளைகளின் தந்தையைக் காணவில்லை.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது…

76 0 0
அம்பாறை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

61 0 0
அம்பாறை செய்திகள்

குட்டி யானை ஒன்று உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட புறநகர் கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும் வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ…

65 0 0
அம்பாறை செய்திகள்

ஹிஜாப் அணிந்து பொத்துவில் கலாச்சாரத்தை அனுபவித்த நியூசிலாந்து பெண்கள்.!

அம்பாறை மாவட்டம் பொத்துவில், அறுகம்பைப் பகுதியில் இயங்கி வரும் ‘மொரிட்டா அட்வென்ச்சர்ஸ்’ (Morita Adventures) சுற்றுலா அமைப்பினூடாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இரு இளம் பெண்கள் மீன்பிடிப்…

94 0 0