உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
90 பார்வைகள்

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.

வரவிருக்கும் குளிர்காலத்தில் உக்ரைனின் வெப்பமூட்டும் மற்றும் மின்சார உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தும் என உக்ரைனியர்கள் அஞ்சுகின்றனர்.

இரு தரப்பாலும் நடத்தப்பட்டு வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களால் துறைமுகங்கள், கிடங்குகள், கப்பல்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கருங்கடல் ஊடான ஏற்றுமதியும் முடங்கியுள்ளது.

முன்னதாக, உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கவலை வெளியிட்டிருந்தார்.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கோரியுள்ளது. எனினும், மொஸ்கோவை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர ரஷ்யாவின் எண்ணெய் தொழிற்துறை மீதான தாக்குதல்களே சிறந்த வழி என உக்ரைன் கருதுகிறது.

இந்நிலையில், இந்த சந்திப்பின் போது ரஷ்யா தாக்குதல்களை நிறுத்த முன்வராவிட்டால், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு பெற்றுக்கொள்வது குறித்தும் ட்ரம்ப் உடன் ஸெலென்ஸ்கி கலந்தாலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

2 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

75 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0