உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

மன்னார் கீரி கடற்கரையில் நடைபெறவுள்ள உலக சுற்றுலா தினம்; முன்னாயத்த பணிகள் தீவிரம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
63 பார்வைகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மன்னார் கீரி கடற்கரையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிகழ்வுக்கான முன்னாயத்தப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகளை நேரில் பார்வையிடும் வகையில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர், சுற்றுலா வடக்கு (Tourism North) அமைப்பின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் கீரி கடற்கரைக்கு நேரில் விஜயம் செய்தனர்.

இதன்போது, உலக சுற்றுலா தின நிகழ்வு நடைபெற உள்ள கீரி கடற்கரைப் பகுதியை நேரில் பார்வையிட்ட அதிகாரிகள், நிகழ்வின் ஏற்பாடுகள், பாதுகாப்பு, உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டனர்.

அத்துடன், நிகழ்வு நடைபெற உள்ள கீரி மற்றும் தாழ்வுபாடு கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் அதிகாரிகள் நேரடி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது, உலக சுற்றுலா தின நிகழ்வை சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடத்துவதற்கு கிராம மக்களால் வழங்கப்படவுள்ள ஒத்துழைப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், நிகழ்வை முன்னெடுப்பது தொடர்பில் மக்களின் கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்களும் கேட்டறியப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் கடற்கரை வளங்கள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில், உள்ளூர் சமூகத்தின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி கீரி கடற்கரையில் நடைபெறவுள்ள உலக சுற்றுலா தின நிகழ்வை முன்னிட்டு, அப்பகுதி தற்போது விழாக்கோலம் பூண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை…

85 0 0
இலங்கை செய்திகள்

இரவு நேர வழிப்பறியாக மாறிவரும் ஹட்டன் நகரின் முச்சக்கரவண்டி வாடகை.!

ஹட்டன் நகருக்கு இரவு நேரங்களில் தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இரவு 9 மணிக்குப் பின்னர் முச்சக்கரவண்டிகளில்…

69 0 0
இலங்கை செய்திகள்

வேலையற்ற பட்டதாரிகளுக்காக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் யாவை?

“போட்டிப் பரீட்சை இன்றி சேர்த்துக் கொள்ளப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு இனிவரும் காலங்களில் வேலையற்ற பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்களா? இன்று வரை அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும்…

84 0 0
இலங்கை செய்திகள்

ஆடை உந்துருளியின் சக்கரத்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவி உ**யிரிழப்பு.!

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய…

64 0 0