உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

யாழில் சிறுவன் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
24 பார்வைகள்

யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவனை உடனடியாக மீட்ட அவரது தாயார் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அதற்குள் சிறுவனின் உயிர் பரிதாபகரமாகப் பிரிந்துள்ளது.

நாவல் மரக் கிளையில் குளுக்கோஸ் வயரிலேயே சிறுவன் தொங்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இந்த மரணம் தற்கொலை என்று நிரூபணம் செய்யப்பட்டால், இலங்கையில் இடம்பெற்ற மிகக் குறைந்த வயதுத் தற்கொலையாக இது பதிவாகும் என்று கூறப்படுகின்றது.

இலங்கையில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வயதுத் தற்கொலையாக 13 வயது உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பழிவாங்கல் காரணமாக ஊதியம் இடைநிறுத்தம்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசிரியர் முறைப்பாடு.!

யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர், பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக முறையான முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனது ஊதியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

19 0 0
இலங்கை செய்திகள்

சிறுமிகளை ஏமாற்றி துஷ் – பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி சிக்கினார்.!

கிளிநொச்சியிலிருந்து காரைநகர் செல்ல வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.…

25 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்தை அழிக்கும் அரசியல் சூழ்ச்சி.!

அரசமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…

14 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

44 0 0