உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
20 பார்வைகள்

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தொல்பொருள் திணைக்களம் தனது எல்லை மீறிய நடவடிக்கைகளை நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் அவர்களின் தீவிர சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட வரலாற்றுச் எச்சங்களைப் பேணிப் பாதுகாப்பதைத் தவிர வேறு எந்தவொரு புதிய கட்டுமானங்களையோ அல்லது மத ரீதியான மறுசீரமைப்புகளையோ மேற்கொள்ளக் கூடாது எனத் தொல்பொருள் திணைக்களத்திற்கு மேல் நீதிமன்றம் கடுமையான தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கன்னியா பிள்ளையார் ஆலயத்திற்குச் சொந்தமான நிலப் பகுதியில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்ட தொல்பொருள் திணைக்களம், அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்தைப் பாதுகாப்பதாகக் கூறி புதிய கட்டுமானப் பணிகளைச் முன்னெடுக்க முயன்றது.

ஏற்கனவே 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் எட்டப்பட்ட நீதிமன்ற ஒப்பந்தங்கள் மற்றும் உத்தரவுகளின்படி, தனியார் நிலத்தில் கண்டறியப்பட்ட தொல்பொருள் எச்சங்களைப் பேணிப் பாதுகாக்கும் அதிகாரம் மட்டுமே திணைக்களத்திற்கு உண்டு என்றும், அங்கு புதிதாக வேறு மதக் கட்டுமானங்களை உருவாக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

எனினும், அவ்வுத்தரவுகளை மீறித் தொல்பொருள் திணைக்களம் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் மேல் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றைத் தாக்கல் செய்து வாதாடினார்.

தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் 20ஆவது பிரிவின் கீழ் எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதியை சேதமடையாமல் பாதுகாப்பதைத் தவிர வேறு எவ்வித கட்டுமானங்களையும் திணைக்களத்தால் மேற்கொள்ள முடியாது என்பதைச் சட்டத்தரணி M.A. சுமந்திரன் நீதிமன்றில் ஆணித்தரமாக வாதிட்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை அப்பகுதியில் எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்கக் கூடாது என உத்தரவிட்டதுடன், தொல்பொருள் திணைக்களமும் தனக்கு ஒதுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைப் பாதுகாக்கும் எல்லைக்கு அப்பாற்பட்டுச் செயல்பட முடியாது என ஏற்றுக்கொண்டது.

கன்னியா பகுதியில் வரலாற்றுச் சின்னங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆக்கிரமிப்பு மற்றும் வரலாற்றுத் திரிபு நடவடிக்கைகளுக்கு M.A. சுமந்திரன் அவர்களின் இந்த சட்டரீதியான தலையீடு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாகப் பொதுமக்களும் தமிழ் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சிறப்பு இறை பிரார்த்தனை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக மீட்டு வர வலியுறுத்தி, காரைதீவில் சிறப்பு…

28 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் பொலீசாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவீடுசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கு இடையே இன்றைய தினம் ஏற்பட்ட முறுகல் நிலையானது காத்தான்குடி…

19 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய…

26 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

28 0 0