உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

தேசிய மட்டத்தில் பதக்கங்களை குவித்த வட்டு இந்துக் கல்லூரி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
31 பார்வைகள்

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டி 2026 மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்ட யாழ். வட்டு இந்துக் கல்லூரி மாணவர்கள் நான்கு பதக்கங்களை தம்வசம் சுவீகரித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டியும் பொலநறுவை றோயல் கல்லூரியில் 40 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது. குறித்த போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் நான்கு பதக்கங்களை தம்வசம் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டி 2026 இல் அறிவிப்பாளர் போட்டியில் அருந்தவன் சரண்யா இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் தேசிய மட்ட விவாதப் போட்டியில் மூன்றாம் இடத்தை அ.சரணியா, ஆ.றுஜிதா, ச.ஷைந்தவி ஆகியோர் பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கல் நிகழ்வில் 17 வயது ஆண்கள் பிரிவில் 96 கிலோகிராம் எடையில் அ.அற்புதன் இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் 17 வயது பெண்கள் பிரிவில் 71 கிலோகிராம் இடையில் கே.சாத்விகா மூன்றாவது இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

பதக்கங்களை பெற்றுக் கொண்டுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் யாழ். வட்டு இந்துக் கல்லூரி மைதான திறந்தவெளி அரங்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களை வழங்கி வைத்ததோடு தேசிய மட்ட போட்டியில் பெற்றுக்கொண்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் என்பவற்றை கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர் ஆகியோரினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

15 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

22 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 15 பேர் குற்றவாளிகள்.!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24…

23 0 0
இலங்கை செய்திகள்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு…

27 0 0