உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற புத்தாக்கக் கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
29 பார்வைகள்

பாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனைகளைத் தூண்டும் கண்காட்சிகளை நடத்துவதை நான் வரவேற்கின்றேன். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளின் வெளிப்பாடு, அவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வரும்போது ஆளுமையுள்ளவர்களாகவும், துரிதமாகவும் புத்தாக்கமாகவும் சமூக நலன் சார்ந்தும் முடிவெடுக்கக்கூடியவர்களாகவும் மிளிர்வதற்கான வாய்ப்பாக அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், கண்காட்சியை முழுமையாகப் பார்வையிட்டதுடன், மாணவர்களின் புத்தாக்கப் படைப்புகளைப் பாராட்டினார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர் செல்வி கிறேஸ் தேவதாயினி தேவராஜா அவர்களின் தலைமையில் நடைபெறும் இப்புத்தாக்கக் கண்காட்சி செப்டெம்பர் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் பாடசாலை வளாகத்தில் இடம்பெறுகிறது. யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரியர் ஆலோசகர் திருமதி கே.வனிதா சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டிருந்தார்.

கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர், மாணவர்கள் தமது சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியிருந்த பல்வேறு படைப்புகளை நேரில் பார்வையிட்டு, அவை தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர், ‘எங்கு தலைமைத்துவம் சிறப்பாக அமைகின்றதோ, அங்கு வளர்ச்சிக்கான பாதை தென்படும்’ எனக் குறிப்பிட்டார். ஒரு பாடசாலைக்கு சிறந்த அதிபர் கிடைத்தால் அந்தப் பாடசாலை வளர்ச்சியை நோக்கிச் செல்லும்; அதேவேளை பொருத்தமற்ற தலைமைத்துவம் காணப்படும் நிலையில் அதன் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.

தாம் மாவட்ட செயலராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற காலத்திலும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், தற்போது அதிபராகக் கடமையாற்றும் செல்வி கிறேஸ் தேவதாயினி தேவராஜா அவர்கள் முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளராகத் தமது கூட்டங்களில் பங்கேற்றவர் எனவும், சிறந்த ஆளுமையைக் கொண்டவர் எனவும் குறிப்பிட்டார். இவ்வாறான புத்தாக்கக் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அவர் தொடர்ந்து செயற்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்கள் பாடப்புத்தகக் கல்வியில் மாத்திரம் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது எனத் தெரிவித்த ஆளுநர், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளும் கல்வியும் இணைந்தால்தான் மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியடையும் எனக் குறிப்பிட்டார்.

புத்தகக் கல்வியால் மாத்திரம் உயர்ந்த ஒருவர் சமூகத்துக்கு உதவும் மனப்பான்மையைப் பெறுவார் எனக் கூற முடியாது எனத் தெரிவித்த அவர், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் சிறந்த ஆளுமையுடனும் தலைமைத்துவப் பண்புடனும் வளர்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு வளர்ந்த மாணவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வரும்போது, துரிதமாகவும், புத்தாக்கமாகவும், சமூக நலன் சார்ந்தும் முடிவுகளை மேற்கொள்ளக் கூடியவர்களாக உருவாக முடியும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அவ்வாறான ஆளுமையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக விருந்தினர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டதையடுத்து, புத்தக வெளியீடும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல்கள் நடக்கும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.!

அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்…

26 0 0
இலங்கை செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி.!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான விவசாயிகள் முருங்கைச் செய்கையில் ஈடுபடுகிறார்கள். புன்னைநீராவி, கல்லாறு, பிரமந்தனாறு, மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் பலர் பல இலட்சம்…

27 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பத்தரமுல்லே சீலரத்ன தேரர்.!

சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று…

15 0 0
இலங்கை செய்திகள்

கால அவகாசம் கோரிய பொலிஸார்; மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு.!

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது. குறித்த…

20 0 0