உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கால அவகாசம் கோரிய பொலிஸார்; மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
93 பார்வைகள்

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (22.09.2026) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தமது சான்றுகளை சமர்ப்பித்ததுடன், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.

இதேநேரம் கடந்த ஜூலை 28ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின்போது, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடம் தொடர்பான சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து திரட்டி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இருந்தும் மீண்டும் பொலிஸார் இன்றையதினமும் கால அவகாசம் கோரியிருந்தனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதிக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின்போது வழக்காளிகள் சார்பில் சட்டத்தரணி செபமாலைமுத்து கிருஸ்னபெலினா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் உள்ளிட்டோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

முன்பதாக, மண்டைதீவு சம்பவத்தில் தனது மகனை இழந்ததாகக் கூறப்படும் 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா மற்றும் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் கடந்த வருடம் செப்டெம்பர் 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முதன்முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இன்னிலையில் மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களைத் திரட்டுவதற்காக பொலிஸார் தொடர்ந்தும் கால அவகாசம் கோரிவரும் நிலையில், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் உள்ள மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் விசாரணைகள் மேலும் தாமதமடைவது பாதிக்கப்பட்ட தரப்பினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

149 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

138 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

132 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

140 0 0