உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கிளிநொச்சியில் “குலதெய்வம்” கவிதை நூல் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
10 பார்வைகள்

​எழுத்தாளர் டக்‌ஷனா கிருஷ்ணானந்தனின் (குகதா) “குலதெய்வம்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கரைச்சிப் பிரதேச சபை புதிய மண்டபத்தில் நடைபெற்றது.

​இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.

​கவிதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் “குலதெய்வம்” நூலிற்கான வெளியீட்டுரையினை கவிஞர் யோ. புரட்சியும், நயவுரையினை எழுத்தாளரும் தமிழாசிரியருமான திரு.கனகரெட்ணம் செந்தூரனும் வழங்கினர்.

​”அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை” கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர் வரிசையில் கரைச்சிப் பிரதேச செயலாளர் தவச்செல்வம் முகுந்தனும், சிறப்பு விருந்தினர்களாக பூநகரி ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி நாகேந்திரம் கணேஸ்வரநாதன், ஓய்வுநிலை அதிபர் கந்தையா இரட்ணகுமார், கிளி/செல்வாநகர் அ.த.க. பாடசாலை அதிபர் சி. மகேந்திரராஜா ஆகியோரும், விருந்தினர்களாக கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி மருத்துவர் மா. ஜெயராசா, கவிஞர் வேல் லவன், சட்டத்தரணி திரு. தனபாலசிங்கம் லக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி.!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவான விவசாயிகள் முருங்கைச் செய்கையில் ஈடுபடுகிறார்கள். புன்னைநீராவி, கல்லாறு, பிரமந்தனாறு, மயில்வானபுரம் போன்ற பகுதிகளில் பலர் பல இலட்சம்…

19 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பத்தரமுல்லே சீலரத்ன தேரர்.!

சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று…

14 0 0
இலங்கை செய்திகள்

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற புத்தாக்கக் கண்காட்சி.!

பாடசாலை மாணவர்களிடையே புத்தாக்கச் சிந்தனைகளைத் தூண்டும் கண்காட்சிகளை நடத்துவதை நான் வரவேற்கின்றேன். மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளின் வெளிப்பாடு, அவர்கள் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளுக்கு வரும்போது ஆளுமையுள்ளவர்களாகவும், துரிதமாகவும்…

27 0 0
இலங்கை செய்திகள்

கால அவகாசம் கோரிய பொலிஸார்; மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு.!

1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் நவம்பர் 10 ஆம் நாளுக்கு திகதியிடப்பட்டுள்ளது. குறித்த…

19 0 0