உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

உலக செய்திகள் 2 மணி நேரம் முன்
25 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாகச் சீன வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சீனா – அமெரிக்க உறவுகள், உலக அமைதி மற்றும் வளர்ச்சி சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஷீ ஜின்பிங் ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வார் எனச் சீன வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.

ஆறு மாத காலப்பகுதிக்குள் இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரமாக மேற்கொண்ட இந்த விஜயங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையாகக் கருதப்படுவதாகச் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவுடன் இணைந்து உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், கருத்து வேறுபாடுகளைச் சரியாகக் கையாளவும், இரு நாட்டு மக்களின் நலனை மேம்படுத்துவதோடு உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஊக்குவிக்கவும் சீனா தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை : ஈரான் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்!

அமெரிக்காவுடன் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, ஈரான் தனது முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவை செயலாளர்…

20 0 0
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சிக்கல்; ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசர சட்டத்தில் அமெரிக்க…

50 0 0
உலக செய்திகள்

ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா : போர்க் குற்றம் என ஐ.நா. சாடல்!

ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்புவதற்குப் “போதுமான ஆதாரங்கள்” உள்ளன. அத்துடன்…

61 0 0
உலக செய்திகள்

ஜோஹன்னஸ்பேர்க்கில் தொடரும் கொ@லைகள் : 9 ஆவது பெண்ணின் சட@லமும் மீட்பு!

தென்னாப்பிரிக்காவின் வணிகத் தலைநகரான ஜோஹன்னஸ்பர்க் புறநகர்ப் பகுதியில், கடந்த இரண்டு மாதங்களில் எட்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டமையை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட மேலும் ஒரு பெண்ணின் உடலத்தை…

46 0 0