கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம் – முதல்வர் குற்றச்சாட்டு!
கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிர்வாக பிரச்சினையே காரணம் என முதல்வர் மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார்.
கல்லூண்டாய் குப்பை மேட்டினை பார்வையிட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளரை நோக்கி இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் தேவையான நிதியினை ஒதுக்கி தருகிறேன், தேவையான வாகனங்கள், ஆளணிகளை தந்துள்ளேன் அதனை வைத்து நிர்வாகம்தான் சரியாக செயற்பட வேண்டும்.
நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் நடந்ததால் தான் இவ்வாறு பாரிய பிரச்சினை ஏற்பட்டது என்றார்.