உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” – சாகர காரியவசம் எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
22 பார்வைகள்

பிரபலமற்ற நபரொருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் வரை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித இடத்திலோ அல்லது திகதியிலோ அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

இன்றைய தினம் (21) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்:
“கடந்த 02 வருடங்களாக நாட்டின் ஆட்சியை முன்னெடுத்து எதனையும் செய்ய முடியாமல் போன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மீண்டும் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி நகைச்சுவையான கூட்டங்களை நடத்தி வருகிறார்.
இலங்கைக்கு 4G தொழில்நுட்பத்தை வழங்கப்போவதாக ஜனாதிபதி கூறுகிறார்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை எதிர்பார்திருந்த இளைஞர் சமுதாயத்தின் முகத்தில் அடித்தது போல் இது அமைந்துள்ளது. 4G தொழில்நுட்பம் 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, 2015 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் வழங்கப்பட்டுவிட்டது. 2018 இல் 5G தொழில்நுட்ப சோதனைகள் நடத்தப்பட்டு, 2025 ஆம் ஆண்டளவில் அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாட்டில் உள்ள தொழில்நுட்பம் குறித்துக்கூட அறிவில்லாத ஒரு ஜனாதிபதி இருப்பது வருத்தமளிக்கிறது.
அத்துடன், எரிபொருள் நிவாரணம் வழங்குவதாகக் கூறி அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகிறது. தற்போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103 அமெரிக்க டொலர்களாக இருக்கும் நிலையில், தற்போதைய அரசாங்கம் 92 பெட்ரோலை 399 ரூபாவிற்கும், 95 பெட்ரோலை 475 ரூபாவிற்கும், டீசலை 382 ரூபாவிற்கும் விற்பனை செய்கிறது. ஆனால், உக்ரைன் போரினால் 2022 மார்ச்சில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 117 டொலர்களாக உயர்ந்தபோதும், எமது அரசாங்கம் நட்டத்தை ஏற்றுக்கொண்டு 92 பெட்ரோலை 254 ரூபாவிற்கே வழங்கியது.

மக்கள் மீது அதிக வரிகளைச் சுமத்தி பொய் வாக்குறுதிகளை வழங்கி ஜனாதிபதி மக்களை ஏமாற்றுகிறார்.
எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இக்குற்றத்துடன் தொடர்புடைய அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபரொருவரிடம் 13 வருடங்களின் பின்னர் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான எந்தவொரு மின்னஞ்சலிலும் நாமல் ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

இது அநுர குமார திசாநாயக்கவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.
ராஜபக்ஷக்களுக்கு எதிரான பொய்க் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என நாமல் ராஜபக்ஷ முன்னரே கூறியிருந்தார்.

சிச்சியின் ரொக்கெட் விவகாரத்தில் குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபிக்கப்பட்டுவிட்டது. நாமலின் சட்டத்தரணி பட்டம் தொடர்பான விசாரணை அறிக்கையையும் அரசாங்கம் மறைத்து வைத்துள்ளது. இறுதியில், சிச்சியின் ரொக்கெட் பெலவத்தை அலுவலகத்தின் மீது விழுந்தது போல், இந்த எயார்பஸ் குற்றச்சாட்டுகளும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கல்லூண்டாய் பிரச்சினைக்கு மாநகர நிர்வாக பிரச்சினையே காரணம் – முதல்வர் குற்றச்சாட்டு!

கல்லூண்டாய் குப்பை மேட்டு பிரச்சினைக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் நிர்வாக பிரச்சினையே காரணம் என முதல்வர் மதிவதனி குற்றம் சாட்டியுள்ளார். கல்லூண்டாய் குப்பை மேட்டினை பார்வையிட்ட பின்னர்…

25 0 0
இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.…

21 0 0
இலங்கை செய்திகள்

இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொ@லை! : கணவன் கைது!!

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொ@லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

25 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக…

10 0 0