உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
8 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வெளியாகியுள்ள செய்தியானது, அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அரசு மௌனம் காக்காமல், இந்த விவகாரத்தில் உடனடியாகத் துரிதமாகச் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டின் அரசின் தலையாய கடமையாகும் என அரசியல் தரப்பினரும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்.

எனவே, அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு இராஜதந்திர வழிகளிலும், சட்ட ரீதியாகவும் அரசு உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.…

18 0 0
இலங்கை செய்திகள்

இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொ@லை! : கணவன் கைது!!

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொ@லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

22 0 0
இலங்கை செய்திகள்

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” – சாகர காரியவசம் எச்சரிக்கை!

பிரபலமற்ற நபரொருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் வரை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித இடத்திலோ அல்லது திகதியிலோ அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை…

20 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே…

29 0 0