உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
29 பார்வைகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் இடையில் மின்னஞ்சல் ஊடாகத் தகவல் பரிமாற்றப்பட்டது என்று தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நீதிமன்ற விசாரணைகளில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை.

நீதிமன்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்படாத விடயங்களைச் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் போலியான கருத்துக்களாகச் சமூகமயப்படுத்தி வருகின்றனர்.

வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவரான நாமல் ராஜபக்ஷவை இந்த அரசு திட்டமிட்ட வகையிலேயே சிறைப்படுத்தியுள்ளது.

அரசின் இந்த அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலைச் சட்டரீதியாக நீதிமன்றம் ஊடாக எதிர்கொள்வோம்.

ராஜபக்ஷக்களை இலக்காகக் கொண்டே அநுர அரசு செயற்பட்டு வருகின்றது. அரசின் ஊழல், மோசடிகள் மற்றும் சர்வாதிகாரச் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டும் தரப்பினரே இவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றனர்.

அரசு தனது நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் அதிகாரம் நிலையற்றது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.…

16 0 0
இலங்கை செய்திகள்

இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொ@லை! : கணவன் கைது!!

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொ@லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

22 0 0
இலங்கை செய்திகள்

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” – சாகர காரியவசம் எச்சரிக்கை!

பிரபலமற்ற நபரொருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் வரை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித இடத்திலோ அல்லது திகதியிலோ அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை…

20 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக…

7 0 0