உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் – தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சனம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
29 பார்வைகள்

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு முன்னெடுக்கும் மக்கள் நலச் செயற்பாடுகளை எந்தவொரு எதிர்த்தரப்பாலும் அசைக்க முடியாது.

ஜனாதிபதி நேரடியாகக் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து உரையாடுவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லாததாலும், நாடளாவிய ரீதியில் ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டுவதற்குக் கூட ஆள்கள் இல்லாத நிலையிலுமே இத்தகைய தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அரசு அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. நாட்டின் ஊடக நிறுவனங்களைத் தீக்கிரையாக்கியதும், ஊடகவியலாளர்களைத் தாக்கி நாட்டை விட்டு விரட்டியடித்தமையும் கடந்த கால ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலங்களில்தான் நடந்தன.

தற்போதைய அரசு ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் எப்போதும் மதித்தே செயற்படும்.

நீதிமன்றக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் அரசமைப்புத் திருத்தங்கள் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவே மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள போராட்டங்களுக்கு அரசு எந்தத் தடையும் விதிக்காது. ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கும் போராட்டங்களுக்கும் முழு உரிமை உண்டு.

நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்வது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசின் பழிவாங்கும் அரசியல் பணி அல்ல. ராஜபக்ஷ குடும்பத்தினரின் ஊழல், மோசடிகள் மற்றும் நாட்டுச் சொத்துக்களைக் கொள்ளையடித்த வரலாற்றை மக்கள் நன்கு அறிந்தவர்கள்.

நாட்டின் இளைஞர்களினதும் பொதுமக்களினதும் கனவுகளை அழித்த ராஜபக்ஷ குடும்பத்துக்கு மக்கள் மீண்டும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை.

நாமல் ராஜபக்ஷ 2029 இல் ஜனாதிபதியாக வேண்டுமென்றால், சிறைச்சாலையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் நேற்று பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.…

18 0 0
இலங்கை செய்திகள்

இளம் குடும்பப் பெண் வெட்டிப் படுகொ@லை! : கணவன் கைது!!

பொலன்னறுவை, தமன்கடுவை பிரதேசத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொ@லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவரது சொந்த வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

22 0 0
இலங்கை செய்திகள்

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” – சாகர காரியவசம் எச்சரிக்கை!

பிரபலமற்ற நபரொருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் வரை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித இடத்திலோ அல்லது திகதியிலோ அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை…

20 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக…

7 0 0