உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

22ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தைரியமிருந்தால் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
23 பார்வைகள்

“அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது. அரசுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்திக் காட்ட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக நாம் ஏற்கனவே அனுராதபுரத்தில் 500 கிராமங்களுக்குச் சென்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் பேராசிரியர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஓய்வுபெற்ற உயர் இராணுவ அதிகாரிகள் எனப் பல கல்வியாளர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் ஜே.வி.பி.யின் கடந்தகால ஜனநாயக விரோத வரலாற்றுக்குக் குருட்டுத்தனமாகத் துணைபோகாமல், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தங்களது மனச்சாட்சிக்கு அமைவாக இந்த 22ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.

மொனராகலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று வகுப்புகளை நடத்தி வருகின்றனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. ஜே.வி.பி. மீண்டும் பழைய பாணியில் புதிய தலைமுறை மாணவர்களைத் திசைதிருப்பி அழிக்க முயல்கின்றதா?

இந்த அரசு தன்னிச்சையாகச் செயற்படாமல் பேச்சுகள் மூலம் தீர்வு காண வேண்டும். தங்களது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஆதரவை வழங்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” – சாகர காரியவசம் எச்சரிக்கை!

பிரபலமற்ற நபரொருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் வரை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித இடத்திலோ அல்லது திகதியிலோ அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை…

19 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக…

6 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே…

26 0 0
இலங்கை செய்திகள்

நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் – தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சனம்!

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய…

27 0 0