உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் எம் பக்கமே நிற்பர்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
19 பார்வைகள்

இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் எவ்வித வன்முறையிலும் ஈடுபடாத மற்றும் ஒரு சிறு கல்லைக் கூட கையில் எடுக்காத மிகவும் அமைதியான புதிய அரசியல் கலாச்சாரத்தைத் தற்போதைய அரசு நாட்டில் நிலைநிறுத்தியுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் சபாநாயகரின் இளைய மகன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் பல மாதங்களாக நாட்டை விட்டு வெளிநாட்டில் தங்கியுள்ளனர்.

இத்தகைய சூழலில் பொதுமக்கள் மற்றும் அரசியல் தரப்பினர் அவர்கள் மீது சந்தேகம் கொள்வதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இயல்பானதே. அத்தகைய சட்டச் சிக்கல்களை அவர்கள் நீதிமன்றத்தின் மூலமாகவே எதிர்கொண்டு தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் எமது பக்கமே நிற்பார்கள் என்ற அதிதீவிர நம்பிக்கை உள்ளது. நாட்டில் பொதுமக்களின் உணர்வுகளும் கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் வெளிப்படுத்துகின்றது.

கடந்த காலங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் நாட்டில் பெரும் இரத்தக் காயங்களும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குப் பாரிய சேதங்களும் ஏற்பட்டதை மக்கள் நேரில் பார்த்துள்ளனர்.

நாங்கள் அரசியலுக்கு வந்த காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு, அரசின் அடக்குமுறைகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் நேரடியாக எதிர்கொண்டே வளர்ந்தவர்கள்.

தற்போதைய அரசின் கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பொதுமக்கள் அல்லது போராட்டக்காரர்கள் மீது ஒரு முறை கூட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.

பழைய அடக்குமுறை கலாச்சாரத்தை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, மக்களின் எதிர்ப்புகளையும் கோரிக்கைகளையும் வன்முறையால் முடக்காமல், அரசுடன் நேரடியாகப் பேச்சு நடத்திச் சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான சூழலையும் ஜனநாயக வழியையும் எங்களது அரசு உருவாக்கியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

“சிச்சியின் ரொக்கெட் போல எயார்பஸ் வழக்கும் பெலவத்தை அலுவலகத்தின் மீதே விழும்” – சாகர காரியவசம் எச்சரிக்கை!

பிரபலமற்ற நபரொருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படும் வரை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எவ்வித இடத்திலோ அல்லது திகதியிலோ அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை…

18 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் : ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக…

5 0 0
இலங்கை செய்திகள்

ராஜபக்ஷக்களை இலக்காக வைத்தே செயற்படுகின்றது இந்த அரசு.!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை அநுர அரசு திட்டமிட்டே சிறைப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே…

26 0 0
இலங்கை செய்திகள்

நாமல் சிறைக்குள்ளேயே ஜனாதிபதியாக இருக்கலாம் – தேவானந்த சுரவீர எம்.பி. விமர்சனம்!

தேசிய மக்கள் சக்தி அரசு மக்களால் வழங்கப்பட்ட ஆணையைப் பயன்படுத்தி நாட்டின் அழிவடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்திப் பாதையில் சீராகப் பயணித்து வருகின்றது என்று தேசிய…

27 0 0